தமிழகத்திலேயே 2 வது பெரிய மார்க்கெட் என்றால் அது மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் தான். ஏனென்றால் 500க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை கடைகள் இருக்கக்கூடிய இந்த மார்க்கெட்டில் வெளி மாவட்டங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும், தென் தமிழகமான தேனி, விருதுநகர், திண்டுக்கல் ,சிவகங்கை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகிறது
இப்படி விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே விளைச்சல் குறைவு காரணமாக காய்கறிகளின் விலை அதிகமாகவே காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திடீரென்று மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் தக்காளியின் விலை குறைந்துள்ளது.
அதாவது இதுவரை 25 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரைக்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் தக்காளியின் விளைச்சல் மிகவும் அதிகமாக இருப்பதினால் தக்காளியின் விலை 10 லிருந்து 15 ரூபாய் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது.
தக்காளியின் விளைச்சல் மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தினால் விலையேற்றம் குறைவாக இருப்பதாகவும் இனிவரும் நாட்களில் தக்காளியின் விளைச்சலை பொறுத்து ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
