Facebook, Instagram மற்றும் WhatsApp பயனாளர்களுக்குக் கூடுதல் அதிகாரத்தையும், படைப்பாற்றலையும் வழங்கும் நோக்கில் மெட்டா நிறுவனம் புதிய ‘பிரிமியம்’ (Premium) சந்தா திட்டங்களை வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது.
Facebook மற்றும் WhatsApp -பின் தற்போதைய அடிப்படைச் சேவைகள் எப்போதும் போலவே இலவசமாகவே தொடரும் என்றும், சந்தா செலுத்தும் பயனாளர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் அதிநவீன வசதிகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் META நிறுவனம் சுமார் $2 பில்லியன் (S$2.5 பில்லியன்) மதிப்பில் வாங்கிய ‘மனுஸ்’ (Manus) என்ற ஏஐ ஏஜென்ட் தொழில்நுட்பம் இந்தச் சந்தா திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். இது சர்வதேசப் பயணங்களைத் திட்டமிடுவது அல்லது வணிக விளக்கப்படங்களை உருவாக்குவது போன்ற கடினமான பணிகளை எளிதாக்கும்.
META -வின் ‘வைப்ஸ்’ (Vibes) தொழில்நுட்பம் மூலம் ஏஐ வீடியோக்களை உருவாக்கலாம். இது இனி ‘ஃப்ரீமியம்’ (Freemium) முறையில் இருக்கும்; அதாவது அடிப்படை வீடியோக்கள் இலவசம், அதிகப்படியான வீடியோக்களுக்குச் சந்தா தேவைப்படும்.
இன்ஸ்டகிராமில் வரப்போகும் கூடுதல் வசதிகள்:
புதிய சந்தா திட்டத்தின் கீழ் இன்ஸ்டகிராம் பயனாளர்களுக்குச் சில பிரத்யேக வசதிகள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது:வரம்பற்ற ஆடியன்ஸ் லிஸ்ட் (Unlimited Audience Lists) உருவாக்கம்.நம்மை பின்தொடராதவர்களை (Non-followers) எளிதாகக் கண்டறிதல்.மற்றவர்களின் ஸ்டோரிகளை ரகசியமாக (Anonymous Story View) பார்க்கும் வசதி என்பன வழங்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய சந்தா முறை தற்போதுள்ள ‘புளூ டிக்’ (Blue Tick) வழங்கும் Meta வெரிஃபைட் திட்டத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இது முழுக்க முழுக்க கூடுதல் தொழில்நுட்ப வசதிகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.வருவாய் ஈட்டுதல்: ஏஐ துறையில் மெட்டா மேற்கொண்டு வரும் பெரும் முதலீடுகளைத் திரும்பப் பெறவும், ஸ்நாப்சாட் (Snapchat+) போன்ற நிறுவனங்களின் வெற்றியைப் பின்தொடரவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.




