Last Updated:
வரி நீக்க நடவடிக்கையின் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஆண்டுக்கு 3.6 லட்சம் கோடி ரூபாய் வரை வரி மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த உடன்படிக்கையால், கடல் உணவுகள், காலணிகள் உள்ளிட்ட இந்திய பொருட்களுக்கான ஏற்றுமதி வரி முற்றிலும் நீக்கப்பட உள்ளன.
புதிய ஒப்பந்தத்தின் மூலம், ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு முக்கிய இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் முற்றிலும் நீக்கப்படும்.
அந்த வகையில் இதுவரை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 26 சதவீதம் வரி முழுவதும் நீக்கப்படும்.
காலணிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 17 சதவீத ஏற்றுமதி வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. ரசாயனப் பொருட்களுக்கான 12.8 சதவீத வரியும் ஆடை மற்றும் ஜவுளிகளுக்கான 12 சதவீத வரியும் முழுமையாக ரத்து செய்யப்படும்.
ரயில் மற்றும் கப்பல்களுக்கான 7 சதவீத வரியும், பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களுக்கான 4.7 சதவீத வரியும், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களுக்கான 4 சதவீத வரியும் இனி செலுத்த தேவையில்லை.
இந்த வரி நீக்க நடவடிக்கையின் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஆண்டுக்கு 3.6 லட்சம் கோடி ரூபாய் வரை வரி மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


