கோலாலம்பூர்:
பட்டர்வொர்த்தில் உள்ள உணவகம் ஒன்றில் தாக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க வீடற்ற முதியவர் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சனிக்கிழமை கம்போங் ஜாவா (Kampung Jawa) பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது.
இதுவரை அடையாளம் காணப்படாத அந்த முதியவர் ஆம்புலன்ஸ் மூலம் செபராங் ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
உடற்கூறாய்வு பரிசோதனையில், அவருக்கு இதய நோய் (Coronary Heart Disease) இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், தாக்குதலினால் அவரது இடது பக்க விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரின் சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, கடுமையான காயத்தை விளைவித்தல் (தண்டனைச் சட்டம் பிரிவு 325) என்பதன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வு அதிகாரி ஏஎஸ்பி ஹஸ்ரிமான் ஒஸ்மான் (ASP Hasryman Osman) அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு செபராங் பிறை உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அனுவார் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.
The post பட்டர்வொர்த்தில் தாக்குதலுக்குள்ளான முதியவர் உயிரிழப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

