அசத்தலான திட்டம்… இந்தத் திட்டம் கடந்த ஜனவரி 22ஆம் தேதி அன்று 11 ஆண்டுகளை நிறைவு செய்யது. இதன் மூலம் மக்கள் இந்த திட்டத்தின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. மேலும், இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 4.53 கோடிக்கும் அதிகமான கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதில், பெற்றோர்கள் தங்கள் மகளின் பெயரில் ஒரு கணக்கைத் திறந்து, சிறிது சிறிதாக முதலீடு செய்து, 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரிய தொகையை உருவாக்கலாம். இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் சந்தையில் உள்ள வழக்கமான வங்கி நிலையான வைப்புத் தொகையை விட அதிகமாகும். மேலும், இதில் முதலீடு செய்வதன் மூலம், உங்களுக்கு வரி இல்லாத வருமானம் கிடைக்கும்.


