• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Republic Day 2026 | தேசிய கொடி உருவாக்கத்துக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா? மகாத்மா காந்திக்கும் கொடிக்குமான தொடர்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 25, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Republic Day 2026 | தேசிய கொடி உருவாக்கத்துக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா? மகாத்மா காந்திக்கும் கொடிக்குமான தொடர்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றப்படுகின்றது. தேசிய கொடி, நாட்டின் முக்கிய அடையாளமாகும். மூவர்ண கொடியின் வடிவமைப்பு, பல விவாதங்கள் மற்றும் சவால்களுக்கு பின் உருவாக்கப்பட்டது. இதற்கு பலர் பங்களித்தனர், அதில் முக்கிய பங்களிப்பவர் மகாத்மா காந்தி. காந்தியின் பங்கு, கொடியின் வடிவமைப்பில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தது.

தொடக்கத்தில், காங்கிரஸ் தேசியவாத இயக்கத்திற்கு ஒரு கொடியை ஏற்க வேண்டும் என்று விரும்பியபோது, மசூலிபட்டணத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிங்காலி வெங்கய்யா, காந்தியை அணுகினார். வெங்கய்யா, காந்திக்கு பல கொடி வடிவமைப்புகளைவும், தேசியக் கொடிகள் பற்றிய தகவல்களையும் வழங்கினார். காந்தி எதிலும் திருப்தி அடையவில்லை.

லாலா ஹன்சராஜ் எனும் ஜலந்தரைச் சேர்ந்த கல்வியாளரின் ஆலோசனையின்படி, தன்னம்பிக்கையை சுட்டிக்காட்டுவதற்காக ஒரு கைராட்டையை கொடியில் உள்ளடக்குவது என்பது காந்தியின் அறிவுறுத்தல். பின்னர், சிவப்பு மற்றும் பச்சை நிறங்களைக் கொண்ட கொடியை வெங்கய்யா உருவாக்கினார். காந்தி இதில் வெள்ளை நிறத்தை சேர்த்தார். அனைத்து மதத்தையும் குறிக்கும் வகையில் மேலே வெள்ளை நிறம், இடையில் பச்சை மற்றும் கீழே சிவப்பு நிறங்களுடன் நடுவில் கைராட்டை அமைந்தது. மகாத்மா காந்தி, இக்கொடியை ஒற்றுமையின் சின்னமாக குறிப்பிடுகிறார். மத ஒற்றுமையே நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்பினார்.

கொடியின் நிறங்களுக்காக காந்தி சந்தித்த சவால்களில், சீக்கியத் தலைவர்கள் கருப்பையும் தேசிய கொடியில் இணைக்க வேண்டும் என்று கோரினர். இது சில இடங்களில் போராட்டமாகவும் நடைபெற்றது. இதனால் கொடியின் வடிவமைப்பில் குழப்பம் ஏற்பட்டது.

இந்த எதிர்ப்பையொட்டி, காந்தி, கொடியில் உள்ள நிறங்களுக்கு புதுவித அர்த்தங்களை கொடுத்தார். தியாகத்திற்கு சிவப்பு, தூய்மைக்கு வெள்ளை மற்றும் நம்பிக்கைக்கு பச்சை என்ற குரிய ஒரு புதிய கொடியை வடிவமைக்கப்பட்டது. மத ஒற்றுமை மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையின் சின்னமாக இந்த கொடி பார்க்கப்பட்டது. மத குறிப்புகளற்ற கொடியே எதிர்காலத்திற்கு நல்ல பாதையை கொடுக்கும் என்று காந்தி நம்பினார்.

1931 ஏப்ரல் 2 அன்று, காங்கிரஸ் 7 நபர்களைக் கொண்ட கொடிக் குழுவை அமைத்தனர். மத உணர்வை தூண்டுவதாக கருதி, ஒரே நிறமாக காவி நிறத்தை கொடியில் உபயோகிக்க அறிவுறுத்தினர். ஆனால் காங்கிரஸ் இதை ஏற்கவில்லை. 1931 கராச்சி மாநாட்டில், பிங்கலி வெங்கையா வடிவமைத்த மூவர்ணக் கொடியை ஏற்றுக்கொண்டனர். இந்த கொடி மேலே காவி, நடுவில் வெள்ளை மற்றும் கீழே பச்சை நிறம் கொண்டது. நடுவில் கைராட்டை உள்ளது. காவி நிறம் வலிமை, வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதி மற்றும் பச்சை நிறம் நம்பிக்கை என பொருளுணரப்பட்டது.

காந்தியின் நோக்கம், கொடி மக்கள் ஒற்றுமைக்கு சின்னமாக இருக்க வேண்டும் என்பதே. “கொடியில் அரசியல் சாயம் இருக்கக் கூடாது” என்பதே காந்தியின் கருத்து. இதை ஒரு புனிதச் சின்னமாக கருதினார். சுழலும் கைராட்டை, தன்னம்பிக்கை, தன்னிறைவு மற்றும் உழைப்பின் கண்ணியம் ஆகியவற்றைக் குறிக்கும். இது இந்தியாவின் பொருளாதார சுதந்திரம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான சின்னமாகவும் கருதினார்.

1930ல் நேருவால் எடுத்த பூர்ண ஸ்வராஜ் உறுதிமொழியை நினைவுகூறுமாறு 1947 ஜனவரி 26 அன்று மூவர்ண கொடியை உயர்த்த காந்தி மறுத்தார். பிரிவினையின்றி ஒன்றினைந்த இந்தியாவைதான் கொடி எடுத்துக்காட்ட வேண்டும் என்பதில் காந்தி உறுதியாக இருந்தார். 1947 கவர்னர் மவுண்ட்பேட்டன் யூனியன் ஜாக் சின்னத்தை சேர்க்க வலியுறுத்தினார். இது நேருவால் நிராகரிக்கப்பட்டது. ஆனால் காந்தி ஆதரித்ததாக கூறப்படுகிறது. 1947 தேசிய கொடிக்கான விவாதத்தில், காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்க முடிவெடுத்தனர். பிங்கலி வெங்கையா வடிவமைத்த கொடியில், நடுவில் கைராட்டை நீக்கப்பட்டு, தர்ம சக்கரம் அதாவது அசோக சக்கரம் சேர்க்கப்பட்டது.

1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது. நேரு முதல் பிரதமராக பதவியேற்றார். புதிய மூவர்ணக் கொடி இந்தியா கேட் அருகில் இளவரசி பூங்காவில் ஏற்றப்பட்டது.

பெரும் குழப்பம் நிலவிய நிலையில், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையுடன் வந்த மத வன்முறையால், மூவர்ண கொடியை உயர்த்த மறுத்துவிட்டார் காந்தி. ஒற்றுமையின் நோக்கம் கொண்ட கொடியை ஏற்றுவதில் காந்தி உடன்பாடு இல்லை. சுதந்திர இந்தியாவின் கொடியில் கைராட்டை நீக்கப்பட்டு, அசோக சக்கரம் சேர்க்கப்பட்டது. இதிலும் காந்தி உடன்பாடு இல்லை. சுதந்திர இந்தியாவில் காந்தி தேசிய கொடியை ஏற்றவில்லை.

1948 ஆகஸ்ட் 15 அன்று முதல் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் செங்கோட்டையில் மூவர்ண கொடியை பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏற்றினார்.

Read More

Previous Post

லால் காந்தவை தாக்க மைக் டைசனாக மாறிய சாமர சம்பத்!

Next Post

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? | Selvamagal Semippu Thittam | வணிகம் போட்டோகேலரி

Next Post
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? | Selvamagal Semippu Thittam | வணிகம் போட்டோகேலரி

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? | Selvamagal Semippu Thittam | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin