கோழிக்கோடு:
கேரள பேருந்தில் பயணித்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக சம்பந்தப்பட்ட பெண்ணே பதிவு செய்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதில் காட்டப்பட்ட கோழிக்கோட்டைச் சேர்ந்த நபர் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் யூ (42), ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் தனது குடும்பத்துடன் கோவிந்தபுரத்தில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தீபக் கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் கண்ணூருக்குப் பயணம் செய்துள்ளார்.
அப்போது தீபக்குடன் அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா என்ற பெண் பயணி, சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தீபக் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை அவர் சுமத்தியிருந்தார்.

