Last Updated:
ஸ்பெயினில் மலகா – மாட்ரிட் அதிவேக ரயில் கோர்டோபா அருகே தடம்புரண்டு மற்றொரு ரயில் மீது மோதி 21 பேர் உயிரிழந்தனர்.
ஸ்பெயின் நாட்டில் அதிவேக ரயில் தடம்புரண்டு மற்றொரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.
ஸ்பெயினின் மலகா பகுதியில் இருந்து அந்நாட்டின் தலைநகர் மாட்ரிட் நோக்கி அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் 300க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கோர்டோபா நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயில் திடீரென தடம்புரண்டு அடுத்திருந்த மற்றொரு தண்டவாளத்திற்கு சென்றது.
அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி சென்ற ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால், ரயில் பெட்டிகளுக்குள் பயணிகள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். சிலர் ஜன்னலை உடைத்துக்கொண்டு வெளியேறினர்.
தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் ரயில் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 21 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 70-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


