Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் காசா அமைதி குழு உருவாக்கம், நரேந்திர மோடி மற்றும் ஷெபாஸ் செரிஃப் உள்ளிட்டோருக்கு அழைப்பு, மார்க் ரூபியோ, டோனி ப்ளேயர், அஜய் பங்கா உறுப்பினர்கள்.
தனது தலைமையிலான காசா அமைதி குழுவில் இணைய பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் உறுப்பினர்களாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி ப்ளேயர், உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா உள்ளிட்டோரை டிரம்ப் நியமித்துள்ளார்.
இதில் பிரதமர் நரேந்திர மோடியும் இணைய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் காசா அமைதி குழு, உலகின் பல்வேறு நாடுகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.


