Last Updated:
இந்தோனேசியாவில் 11 பேருடன் மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் புளுசாரங்க் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் திடீரென மாயமான நிலையில் அதன் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி மாகாணத்திற்கு சனிக்கிழமை பிற்பகலில் சிறிய ரக விமானம் புறப்பட்டது. அதில், மூன்று பயணிகள் உட்பட 11 பேர் பயணித்தனர்.
சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் மலைப்பாங்கான பகுதியில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், புளுசாரங்க் (Mount Bulusaraung) மலைப் பகுதியில் உடைந்த விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
விமானத்தில் பயணித்தவர்கள் என்ன ஆனார்கள் என தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Jan 18, 2026 10:25 PM IST


