Last Updated:
ஈரானில் புதிய தலைமைக்கான நேரம் வந்துவிட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிராக ஈரானில் போராட்டம் நடத்துபவர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஈரான் நாட்டில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், அடக்குமுறை மற்றும் வன்முறைகளை நம்பியே ஈரான் உச்ச தலைவர் கமேனியின் ஆட்சி இருப்பதாக சாடினார். மேலும் கமேனி நாட்டையே முழுமையாக அழித்துவிட்டார் என்றும் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
தான் அமெரிக்காவை வழிநடத்துவது போல ஈரானின் தலைவரும் தனது நாட்டை வழிநடத்த வேண்டுமே தவிர, மக்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக ஆயிரக்கணக்கானோரை கொல்ல கூடாது என்றும் கடுமையான விமர்சனங்களை டிரம்ப் முன் வைத்துள்ளார்.
தலைமைப் பண்பு என்பது மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும் என்றும், பயத்தை தருவதாக இருக்கக்கூடாது என தெரிவித்துள்ள டிரம்ப், ஈரானை வாழ தகுதியற்ற இடமாக மாற்றிவிட்டார் என்றார்.
“ஈரானுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டது” – அதிபர் டொனால்ட் டிரம்ப்


