Last Updated:
கடும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், வெளியே சுற்றித்திரிய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்றின் தர மேலாண்மை ஆணையம் (CAQM) காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் கடுமையான’ நிலையை நெருங்கியதால், தரநிலை செயல் திட்டத்தின் (GRAP) நான்காம் கட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
காற்றின் தரக் குறியீடு 428 என்ற கடுமையான நிலையை எட்டியதால், நான்காம் கட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிவரும் லாரிகள், இயற்கை எரிவாயுவால் இயங்கும் வாகனங்கள் தவிர மற்ற லாரிகளுக்கு டெல்லிக்குள் அனுமதி இல்லை. 6 முதல் 9 -ம் வகுப்பு வரையிலான மற்றும் 11 -ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் நடத்தவும், தேவைப்பட்டால் நேரில் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட பணிகளுக்கான உள்கட்டமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், வெளியே சுற்றித்திரிய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


