இந்த ஆச்சரியத்தைத் தொட, சீனா பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. தனது ரூட்டை மாற்றியது அவ்வளவு தான்.
ட்ரம்பின் வரிகளால், அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறைந்தன. இதை சமன் செய்ய தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்ப நாடுகள், தென் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியை முன்பை விட கூடுதலாக்கியது.
இந்த மாற்றத்தினால், கடந்த நவம்பர் மாதத்திலேயே 1 டிரில்லியன் டாலர் அபரிமிதத்தை சீனா தாண்டியிருக்கிறது.
ஆக, இந்த வளர்ச்சி அமெரிக்காவைத் தாண்டி உள்ளது.
இந்த வர்த்தக அபரிமிதத்தைத் தொட 3 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.
ஒன்று, வர்த்தக அபரிமிதம் என்றால் அதிக உற்பத்தி இருந்திருக்க வேண்டும்… அப்போது தான் ஏற்றுமதி அதிகம் செய்ய முடியும். அதிக உற்பத்தியை ஒரு ஆண்டில் திடீரென செய்துவிட முடியாது.
ஆக, சீனா பல ஆண்டுகளாக கட்டி வந்த… கடைப்பிடித்து வந்த தொழில் கொள்கை தான் இப்போதைய இந்த வளர்ச்சிக்குக் காரணம். சீனா வளர வளர தனது உற்பத்தித் திறனையும் அதிகரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு, 2021-ம் ஆண்டில் சீனா ரியல் எஸ்டேட்டில் பெரும் சறுக்கலைக் கொண்டது.
அதுவரை சீனாவின் வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை பெரும்பங்காற்றியது.
ஆம்… சீன மக்கள் வீடுகளை நல்ல முதலீடாக பார்த்து வந்தனர். அதனால், அவர்கள் தங்க ஒரு வீடு, முதலீட்டிற்கு ஒரு அல்லது பல வீடு என்கிற கான்செப்ட்டைப் பின்பற்றி வந்தனர்.
இதனால், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கடன் வாங்கி பல வீடுகளைக் கட்டி குவித்தனர். இதனால், வீடுகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே போனது.

