பேங்க் ஆஃப் பரோடா: கடந்த ஜனவரி 5 முதல் BOB தனது FD-க்கு புதிய வட்டி விகிதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு, இந்த வங்கியில் வட்டி விகிதம் 3.50 சதவீதத்திலிருந்து 6.45 சதவீதமாக தொடர்கிறது. அதேநேரம் மூத்த குடிமக்களுக்கு, இந்த விகிதம் அதிகபட்சமாக 7 சதவீதத்தை தாண்டியுள்ளது. அதிக லாபத்தைப் பெற, வாடிக்கையாளர்கள் 444 நாட்கள் FD திட்டத்தைத் தேர்வு செய்யலாம். இந்த மெச்சூரிட்டி பீரியட் கொண்ட திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.60 சதவீத வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.20 சதவீத வட்டியையும் வங்கி வழங்குகிறது.


