Last Updated:
ஒரு பேட்டர் காயம் அல்லது உடல்நலக்குறைவு இல்லாமல், கேப்டனின் முடிவின்படி அல்லது தானாகவே வெளியேறினால் அது ‘ரிட்டயர்டு அவுட்’ எனக் கருதப்படும்
டி20 போட்டியில் ஆமை வேகத்தில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை மெல்போர்ன் அணி ரிட்டயர்ட் ஹர்ட் அவுட் செய்து வெளியேற்றியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஷ் லீக் (BBL) போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கும் சிட்னி தண்டர் அணிக்கும் இடையே நேற்று நடந்த பாகிஸ்தான் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் ‘ரிட்டயர்டு அவுட்’ செய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடிய ரிஸ்வான், தொடக்கத்திலிருந்தே ரன் குவிக்க மிகவும் திணறினார். அவர் 23 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் (ஸ்டிரைக் ரேட்: 113). இன்னிங்ஸின் 18-வது ஓவர் முடிந்த நிலையில், ரன் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மெல்போர்ன் அணியின் கேப்டன் வில் சதர்லேண்ட் , ரிஸ்வானை பெவிலியனுக்குத் திரும்புமாறு சைகை காட்டினார்.
ரிஸ்வான் காயமடையவில்லை, ஆனால் அணியின் நலனுக்காக அவர் ‘ரிட்டயர்டு அவுட்’ முறையில் வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக கேப்டன் வில் சதர்லேண்ட் களமிறங்கினார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதன் மூலம் பிபிஎல் (BBL) வரலாற்றில் ‘ரிட்டயர்டு அவுட்’ செய்யப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் என்ற தேவையற்ற சாதனையை ரிஸ்வான் படைத்துள்ளார். இந்த சீசனில் ரிஸ்வான் 8 போட்டிகளில் விளையாடி 167 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 102 என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது.
இந்த மேட்ச்சில் ரிஸ்வானை வெளியேற்றியும் மெல்போர்ன் அணிக்கு பெரிய பலன் கிடைக்கவில்லை. அந்த அணி 170 ரன்கள் எடுத்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், DLS முறையில் சிட்னி தண்டர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதை பிக்பாஷ் லீக் நிர்வாகம் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளது.
Disclaimer
இந்த செய்தியில் வழங்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள், அறிஞர்களிடம் பேசி எழுதப்பட்டவை. இதில், வழங்கப்பட்ட தகவல்களை நேரடியாக/மறைமுகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் சேதம் அல்லது இழப்புக்கான எந்தப் பொறுப்பையும் Local -18 நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாது. ஜோதிடர்களின் கருத்து பொது நலன் சார்ந்தவை. ஆனால், அத்தகவல்களின் சரியான தன்மையை Local- 18 நிர்வாகம் உறுதி செய்யவில்லை.


