
கல்வி மறுசீரமைப்புக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினர், பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் திங்கட்கிழமை (12) முதல் குதித்தனர்.
இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (13) மாலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
பிரதமர் ஹரிணி அமாசூரிய பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரி இந்த சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய ஆங்கில மொழி தொகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருப்பதால், 6 ஆம் வகுப்புக்கான கல்வி சீர்திருத்தங்களை 2027 வரை ஒத்திவைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (13) அன்று நடத்திய வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதனை அடுத்தே விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரகப் போராட்டம் கைவிடப்பட்டது.

