யாழில் பகலில் மோட்டார்
சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த 11 ஆம் திகதி குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணத்திற்கு
அவசர தேவை நிமிர்த்தம் BHU 3878 இலக்கமுடைய pulser ரக மோட்டார் சைக்கிளில்
சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிள்
இதன்போது யாழ்ப்பாணம் ஐந்தாம் குறுக்குத்தெரு பகுதியில் வீதியின் ஓரமாக மோட்டார் சைக்கிளை
நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடையில் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார்.
இதையடுத்து, ஒரு சில நிமிடங்களின் பின்பு திரும்பி வந்து மோட்டார் சைக்கிளை பார்த்த போது
குறித்த இடத்தில் மோட்டார் சைக்கிள் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் களவு போனதை அறிந்து யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில்
குடும்பஸ்தரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் அருகில் உள்ள சிசிசிவி
காட்சிகளை அடிப்படையாக கொண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |


