போராடும் மக்களுக்கு எதிராக இராணுவத்தினரை பயன்படுத்துவதை ஈரான் தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் அறிவுருத்தியுள்ளார்.
ஈரானில் ஆட்சியாளர்களுக்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டத்தில் 544 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் இதனை இஸ்ரேலும் மற்றும் அமெரிக்காவும் தூண்டிவிடுவதாக ஈரான் குற்றம்சாட்டி வருகின்றது.
பரிமாற்ற வசதி
இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ், இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சமீப நாட்களாக ஈரானில் போராட்டக்காரர்களுக்கு எதிராக அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் வன்முறை மற்றும் அதிகப்படியான அதிகார துஷ்பிரயோகம் காரணமாக உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டு வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஈரான் அதிகாரிகள் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தேவையற்ற அல்லது அளவுக்கு அதிகமான அதிகார துஷ்பிரயோகத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகின்றேன்.
தகவல் தொடர்புகளை மீட்டெடுப்பது உட்பட தகவல்களை பரிமாற்ற வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

