“சிலிகான் சிட்டி” என அழைக்கப்படும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கர்நாடகா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கி வேலை செய்துவருகின்றனர்.
இதில், அசெஞ்சர் நிறுவனத்தில் ஷர்மிளா என்பவர், சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். 34 வயதான இவர் ராமமூர்த்தி நகரில் சுப்பிரமணியன் லேஅவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளார். தட்சின கன்னடம் பகுதியைச் சேர்ந்த இவர் வேலைநிமித்தமாக அங்கேயே வாடகை வீட்டில் தங்கியுள்ளார்.
கடந்த மூன்றாம் தேதி இரவில் அவர் குடியிருந்த வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து தீயணைப்புத் துறையினருடன் வந்த போலீசார், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், படுக்கை அறை முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் உள்ளே இருந்த ஷர்மிளா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
மேலும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இளம்பெண் உயிரிழந்திருக்கலாம் என கருதப்பட்டது. இருந்தபோதும், தடயவியல் துறையினர் ஆதாரங்களை திரட்டி விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், சாஃப்ட்வேர் இன்ஜினியர் மூச்சுத்திணறி இறந்ததும், தடயங்களை அழிக்க படுக்கை அறையில் தீ வைக்கப்பட்டதும் அம்பலமானது. இதைத் தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின்பேரில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 18 வயது இளைஞரை பிடித்து விசாரித்தனர். அதில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண், சத்தம் போட்டு வெளியே போக கூறியுள்ளார். உடனே, அந்த இளைஞர் ஷர்மிளாவின் வாய் மற்றும் மூக்கை கைகளால் இறுக்கமாக பொத்தியுள்ளார். இதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த சாப்ட்வேர் இன்ஜினியரிடம் அத்துமீற முயன்ற இளைஞர், அவரை கொலை செய்துவிட்டு, தீ விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய சம்பவம் பெங்களூருவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
பெங்களூரு சாப்ட்வேர் இன்ஜினியர் மரணத்தில் திடீர் திருப்பம்… கொலை செய்துவிட்டு விபத்து நாடகம் ஆடியவர் சிக்கியது எப்படி…?

