Last Updated:
எல்லைப் பகுதிகளில் எதிரிகளின் பதுங்கு குழிகள், கூடாரங்கள் அல்லது மறைத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை கண்டறியும் நோக்கில் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் தோல்வியடைந்தது.
புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்டுள்ள “EOS-N1” செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் இன்று ஏவப்பட்ட நிலையில், தற்போது அது தோல்வியடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
EOS-N1….. Earth Observation Satellite – Next Gen 1 என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு உருவாக்கியுள்ள அடுத்த தலைமுறை புவி கண்காணிப்பு செயற்கைக்கோள். இந்த செயற்கை கோள் அன்வேஷா (Anvesha) என்றும் அழைக்கப்படுகிறது.. அன்வேஷா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘தேடுதல்’ அல்லது ‘ஆராய்ச்சி’ என்று பொருள்.
EOS-N1 செயற்கைகோள் இன்று காலை 10:17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV-C62 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இந்த செயற்கை கோளில் உள்ள ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் இமேஜிங் தான் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.
சாதாரண செயற்கைக்கோள்கள் ஒளியின் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணங்களை மட்டுமே பிரித்து பார்த்து வண்ணப் படங்களை உருவாக்குகின்றன. ஆனால், EOS-N1 செயற்கை கோள் ஒளியின் நூற்றுக்கணக்கான நுணுக்கமான அலைநீளங்களைப் பிரித்துப் பார்க்கும் திறன் கொண்டது. பூமியின் மிகச்சிறிய பொருள்களைக் கூட அடையாளம் காணும் வகையிலான அதிநவீன உணரிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
எல்லைப் பகுதிகளில் எதிரிகளின் பதுங்கு குழிகள், கூடாரங்கள் அல்லது மறைத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை கண்டறியும் நோக்கில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் பிஎஸ் எல் வி சி 62 ராக்கெட் தோல்வியடைந்துள்ளதாகவும், மூன்றாம் கட்டத்தில் இலக்கை அடைய முடியவில்லை எனவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
Jan 12, 2026 11:14 AM IST


