Last Updated:
இதன் மூலம் உலக கிரிக்கெட்டில் அதிக ஆதிக்கம் செலுத்தும் தொடக்க வீரர் என்பதை ரோஹித் சர்மா மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்லின் நீண்டகால சாதனையை முறியடித்துப் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின் போது, தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித், தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்த மைல்கல்லை எட்டினார். ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக அதிக சிக்ஸர்கள் அடித்திருந்த கிறிஸ் கெய்லின் சாதனையை அதாவது 328 சிக்சர்கள் என்ற சாதனையை கடந்து, தற்போது ரோஹித் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தச் சாதனையின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், கெயில் 284 இன்னிங்ஸ்களில் எட்டிய இந்த இலக்கை, ரோஹித் சர்மா வெறும் 191 இன்னிங்ஸ்களிலேயே முறியடித்து அசத்தியுள்ளார்.
அதேபோல், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) சேர்த்து 650 சிக்ஸர்களை விளாசிய உலகின் முதல் வீரர் என்ற வரலாற்றுப் பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
இதன் மூலம் உலக கிரிக்கெட்டில் அதிக ஆதிக்கம் செலுத்தும் தொடக்க வீரர் என்பதை ரோஹித் சர்மா மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.


