Last Updated:
Rahul manKootathil மீது மூன்றாவது பாலியல் புகாரில், பத்தனம்திட்டா பெண் அளித்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். Congress கட்சி நீக்கம்.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய கருக்கலைப்பு செய்த வழக்கில் பாலக்காடு சட்டமன்ற உறுப்பினர் ராகுல் மன்கூட்டத்திலை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ராகுல் மன்கூட்டத்தில்(Rahul manKootathil). இவர் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராகவும் இருந்தார். இவர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் எழுந்த நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் ராகுல் மன்கூடத்தில் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். தன்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகூறி ஏமாற்றிவிட்டதாகவும், வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் சனிக்கிழமை இரவு பாலக்காடு விடுதியில் தங்கியிருந்த ராகுல் மன்கூடத்திலை காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரை பத்தனம்திட்டாவில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்குப் பின்னர் கைது செய்தனர்.
ராகுல் மன்கூட்டத்தில் மீது பதிவு செய்யப்பட்ட மூன்றாவது பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


