
கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல்லேகல விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரின் சடலம் அவரது சிறை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பல்லேகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்தவர் மாவனெல்லைச் சேர்ந்த வெலிமன்லகே சமீர குமார நந்தசேன (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

