Last Updated:
IND vs NZ | நியூசிலாந்து அணி, 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறும் நிலையில், ரிஷப் பந்த் தொடரில் இருந்து விலகியிருக்கிறார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இதையொட்டி, வதோதரா பிசிஏ மைதானத்தில் ரிஷப் பந்த் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, இடுப்புக்கு மேல் பந்து தாக்கியதில் அவர் காயமடைந்தார். வலியால் துடித்த அவருக்கு மைதானத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், ரிஷப் பந்த் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. அதன்படி தற்போது ரிஷப் பந்த் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக துருவ் ஜூரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே சமயம், காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் ஷூப்மன் கில் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இந்திய அணிக்கு பக்கபலமாக பார்க்கப்படுகிறது.
மறுபுறம், மைக்கேல் பிரேஸ்வேல் தலைமையிலான நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபி, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், வில்லியம் ஓ ரூர்க் உள்ளிட்டோர் ஆட்டத்தில் இருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 120 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில், 62 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Jan 11, 2026 11:25 AM IST


