பொதுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளம் ஊடுருவப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த உத்தியோகபூர்வ இணையதளம் பல முறை ஊடுருவப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த சிக்கலை நிவர்த்தி செய்ய SL CERT மற்றும் ICTA நிறுவனங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அரச இலச்சினை
இதற்கிடையில், இணையதளத்தில் காணப்படும் அரச இலச்சினையில் தெளிவின்மை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலின் படி, அமைச்சின் செயலாளர் கடந்த 09 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடொன்றையும் வழங்கியுள்ளார்.
அதன்படி, குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சக மட்டத்திலும் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

