Last Updated:
Malayalam Language Bill | கேரள எல்லையோரம் உள்ள கன்னடம் பயிற்றுவிக்கும் பள்ளிகளிலும் மலையாளத்தை கட்டாயப்படுத்துவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, குற்றம்சாட்டியுள்ளார்.
மலையாள மொழி மசோதாவிற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மொழி திணிப்பு இல்லையென கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.
கேரளாவில் உள்ள பள்ளிகளில் மலையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து பள்ளிகளிலும், முதல் மொழியாக மலையாளம் கட்டாயம் இடம் பெற வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக மலையாள மொழி மசோதாவை மாநில அரசு கொண்டுவந்துள்ளது.
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கேரள எல்லையோரம் உள்ள கன்னடம் பயிற்றுவிக்கும் பள்ளிகளிலும் மலையாளத்தை கட்டாயப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
The apprehensions raised regarding the Malayalam Language Bill, 2025 do not reflect the facts or the inclusive spirit of the legislation passed by the Kerala Legislative Assembly. Kerala’s progress has always been rooted in comprehensive development anchored in equality and… pic.twitter.com/gqc8NAa4FU
— Pinarayi Vijayan (@pinarayivijayan) January 10, 2026
இதற்கு பதிலளிக்கும் விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பினராயி விஜயன், மொழி மசோதா தொடர்பான சித்தராமையாவின் கவலை உண்மையை பிரதிபலிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மசோதாவின் 7ஆவது பிரிவு, மொழி சிறுபான்மையினரான கன்னடம், தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


