Last Updated:
“கடந்த காலங்களைப் போல் ஈரான் மக்களை கொல்லத் தொடங்கினால், அமெரிக்கா தலையிடும்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
கிரீன்லாந்து உடன் எளிதான முறையில் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அவர்கள் விரும்பாவிட்டால் கடுமையான முறையில் செய்து முடிப்போம் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டுமென அந்நாட்டு அதிபர் டிரம்ப் பிடிவாதமாக இருந்து வருகிறார். இந்நிலையில், வாஷிங்டன் டி.சி.யில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கிரீன்லாந்து விவகாரத்தில் அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏதேனும் செய்யப் போகிறோம் என உறுதிபடத் தெரிவித்தார்.
TRUMP: “If we don’t do it, Russia or China will take over Greenland, and we’re not going to have Russia or China as a neighbor. Okay?”
“I would like to make a deal the easy way. But if we don’t do it the easy way, we’re going to do it the hard way.”“I’m a fan of Denmark…but,… pic.twitter.com/xDuqtD4yKT
— Fox News (@FoxNews) January 9, 2026
இதனிடையே, இந்தியா – பாகிஸ்தான் மோதல் குறித்து மீண்டும் குறிப்பிட்ட டிரம்ப், ஒரு கோடி மக்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் தனக்கு நன்றி தெரிவித்ததாகக் கூறினார். ஈரான் பிரச்னையை கவனித்து வருவதாகக் கூறிய டிரம்ப், கடந்த காலங்களைப் போல் மக்களை கொல்லத் தொடங்கினால் அமெரிக்கா தலையிடும் என்றார்.
இந்தியா – பாகிஸ்தான் மோதல்: “பாக். பிரதமர் எனக்கு நன்றி தெரிவித்ததார்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!


