யாழ்ப்பாணம் அரியாலை 13 ஆம் கட்டை பகுதியில் நேற்றுப் பிற்பகல் பாதுகாப்பற்ற கடவையில் அதிவிரைவு ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவிரைவு ரயிலுடனேயே மோட்டார் சைக்கிள் மோதியது.
விபத்தில் காயமடைந்த அரியாலையை சேர்ந்த 23 வயதுடைய நபர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
விபத்துத் தொடர்பாக போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)


