Last Updated:
PF மெம்பர்கள் தங்களுடைய பெயர் மற்றும் பாலினத்தை மாற்றுவதற்கு என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது தொடர்பான 18 ஆவணங்களின் பட்டியலை EPF நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
EPF கணக்கில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றுவதற்கு தேவையான 18 ஆவணங்களின் பட்டியலை இந்தப் பதிவில் பார்க்கலாம். EPFO தனது மெம்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி EPF பதிவேடுகளில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றுவதற்கு, தேசிய இணையதளம் மூலம் வழங்கப்படும் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை (Transgender ID card) ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாயிண்ட் டிக்ளரேஷன் செயல்முறையை எளிமையாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://transgender.dosje.gov.in/ என்ற தேசிய இணையதளம் மூலம் பெறப்பட்ட திருநங்கைகளுக்கான அடையாளச் சான்றிதழ் அல்லது அட்டையை, பெயர் மற்றும் பாலின மாற்றத்திற்கான செல்லுபடியாகும் ஆவணமாகக் கருதப்படும் என்று EPFO தனது சுற்றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், EPF பதிவேடுகளில் பெயர் மற்றும் பாலின மாற்றத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களின் பட்டியலில் இந்த அடையாள அட்டையும் சேர்க்கப்பட்டுள்ளது.
EPF பதிவேடுகளில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றத் தேவைப்படும் 18 ஆவணங்களின் பட்டியல்:
- பாஸ்போர்ட்இறப்புச் சான்றிதழ்
- பிறப்புச் சான்றிதழ்
- ஓட்டுநர் உரிமம்
- மத்திய/மாநில அரசுகள்
- பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) அல்லது வங்கிகளால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை.
- பள்ளிக் கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகம் வழங்கிய பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC) / பள்ளி விடுப்புச் சான்றிதழ் (SLC) / மதிப்பெண் பட்டியல் (பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்).
- வங்கி அதிகாரி கையொப்பமிட்டு முத்திரையிடப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்கு புத்தகம் (Bank Passbook).
- PAN கார்டு / e-PAN
- ரேஷன் கார்டு / PDS புகைப்பட அட்டை.
- வாக்காளர் அடையாள அட்டை / இ-வோட்டர் ஐடி.
- ஓய்வூதியதாரர் புகைப்பட அட்டை (Pensioner Photo Card).
- மத்திய/மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை (CGHS/ECHS/Medi-Claim) அல்லது ராஷ்டிரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா (RSBY) அட்டை.
- புகைப்படத்துடன் கூடிய சாதிச் சான்றிதழ் (ST/ SC/ OBC).
முழு பெயர் அல்லது முதல் பெயர் மாற்றத்திற்கு:
- புதிய பெயர் குறித்த அரசிதழ் (Gazette) அறிவிப்பு மற்றும் பழைய பெயருக்கான ஆதாரத்தை புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் (முதல்முறை மாற்றமாக இருந்தாலும் இது பொருந்தும்).
- வெளிநாட்டினராக இருந்தால், செல்லுபடியாகும் விசா (Visa) மற்றும் பாஸ்போர்ட்.
- புகைப்படத்துடன்கூடிய தியாகிகள் ஓய்வூதிய அட்டை
- இந்திய அரசால் வழங்கப்பட்ட இந்திய வம்சாவளியினர் (PIO) அட்டை அல்லது இந்தியக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர் (OCI) அட்டை.
- திபெத்திய அகதிகள் அட்டை
இந்த புதிய அறிவிப்பை அனைத்து மண்டல அலுவலகங்களும் கவனத்தில்கொண்டு, உறுப்பினர்களின் கோரிக்கைகளை இந்த ஆவணங்களின் அடிப்படையில் விரைவாக நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


