டென்மார்க்கின் கட்டுப்பாட்டில், சுயாட்சி செய்துவரும் கிரீன்லாந்தை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என வல்லரசுகள் போட்டிபோடத் தொடங்கிவிட்டன. கிரீன்லாந்தில் இருக்கும் எண்ணெய் உள்ளிட்ட தாது பொருள்களும், பணி உருகுவதால் ஏற்படும் கடல் வழித்தடமும் முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரீன்லாந்தை சொந்தமாக்கிவிட வேண்டும் எனப் பலத் திட்டங்களை செயல்படுத்த முயன்றுவருகிறார்.
குறிப்பாக, கிரீன்லாந்தின் பொருளாதாரச் சூழலை சாதமாக்கி கிரீன்லாந்து குடிமக்களுக்கு பணம் கொடுப்பது, அல்லது டென்மார்க் மீது அரசியல் அழுத்தம் ஏற்படுத்தியோ, இராணுவம் மூலமோ அந்தப் பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தீவிரமாக செயல்படுகிறார் ட்ரம்ப். அதற்கு டென்மார்க், கிரீன்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஐ.நா-வும், “ஐ.நா-வின் கொள்கைக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் செயல்படுகிறார்” எனக் கண்டனம் தெரிவித்திருந்தது.

