லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துவதற்காக வழங்கப்பட்ட காலக்கெடு முடிவுக்கு வந்த நிலையில் கருவிகளைப் பொருத்தத் தவறிய 141 லாரி உரிமையாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவுள்ளது.
2026 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்த வேண்டும் என அவகாசம் வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வந்த ஊழியர் கைது – வழக்குப்பதிவு செய்த போலீசார்
அதோடு மட்டுமில்லாமல், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கருவிகளைப் பொருத்தத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கைகளும் கொடுக்கப்பட்டன.
அதாவது, கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்த வேண்டும் என்றும், தவறினால் தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நினைவூட்டும் வகையில், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்புவது, நேரடியாக சந்தித்தது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சட்ட நடவடிக்கை
அவ்வாறு இருந்தும், விதிகளை மீறிய 141 லாரிகளை ஆய்வுச் சோதனைக்காக அனுப்புமாறு உத்தரவுகள் அனுப்பப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
அந்த சோதனையில், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை பொருத்தாத லாரிகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், 2026 ஜனவரி 1 ஆம் தேதிக்கு பிறகு வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துபவர்கள் மீதும் தண்டனை விதிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
விதிகளுக்கு இணங்க மறுத்த லாரிகளைக் கண்டறிந்து தண்டனையை வழங்க, சாலை அமலாக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டுக் கருவி இல்லாமல் பிடிபடும் லாரிகளுக்கு S$1,000 வரை அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
மீண்டும் மீண்டும் அதே குற்றம் செய்பவர்களுக்கு S$2,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
கூடுதலாக, 3,501 கிலோ முதல் 5,000 கிலோ வரை எடை கொண்ட, 2018 ஜனவரி 1க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட லாரிகளுக்கான வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை இந்தாண்டு ஜூலை 1 ஆம் தேதிக்குள் பொருத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்சி கட்டணங்கள் அதிகரிப்பு – ஜன.1 முதல் அமல்!

