“இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசினால், இந்தியா – அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும்” – இது பாட்காஸ்ட் ஒன்றில் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கின் வார்த்தைகள்.
லுட்னிக்கின் பேச்சிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதில் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறியுள்ளதாவது…
“இரு தரப்பிற்குமே பலனுள்ள வர்த்தக ஒப்பந்தத்தைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தப் பேச்சுவார்த்தை சீக்கிரம் முடிவடையும் என்றும் நினைக்கிறோம்.

மேலும், 2025-ம் ஆண்டில், இதுவரை பிரதமரும், அதிபர் ட்ரம்பும் பல தரப்பட்ட விஷயங்கள் குறித்து 8 முறை போனில் பேசியுள்ளனர்” என்று பேசியுள்ளார்.
ஆம்… இந்திய பிரதமரின் பிறந்த நாள் தொடங்கி தீபாவளி வரை பல முறை மோடியும், ட்ரம்பும் போன்காலில் பேசியிருக்கின்றனர்.
ஆனால், லுட்னிக் எதைக் குறிப்பிடுகிறார் என்பது சரியாகப் புரியவில்லை. ஒருவேளை, வர்த்தக ஒப்பந்தத்தைக் குறித்தே ட்ரம்பிடம் மோடி பேச வேண்டும் என்று நினைக்கிறார்களோ… என்னவோ?!

