Last Updated:
வங்கதேச விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கவும், பராமரிப்பு மற்றும் ரேடார் அமைப்புகளை மேம்படுத்தவும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது
பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து தயாரித்த ஜே.எஃப்-17 (JF-17 Block III) போர் விமானங்களை வாங்குவது குறித்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேச விமானப்படைத் தளபதிகள் விரிவாகப் பேசியுள்ளனர். வங்கதேசம் இந்த போர் விமானங்களை வாங்கக் கூடும் என்பதால் எல்லையில் புதிய பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ராணுவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே ஏற்பட்டுள்ள இந்த ராணுவ ரீதியான நெருக்கம், தெற்காசிய அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
2024-ல் ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்ச்சிக்குப் பிறகு, வங்கதேசத்தின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவிடமிருந்து விலகி பாகிஸ்தான் மற்றும் சீனாவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது
பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து தயாரித்த ஜே.எஃப்-17 (JF-17 Block III) போர் விமானங்களை வாங்குவது குறித்து இரு நாட்டு விமானப்படைத் தளபதிகளும் விரிவாகப் பேசியுள்ளனர்.
வெறும் விமானங்கள் மட்டுமல்லாமல், வங்கதேச விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கவும், பராமரிப்பு மற்றும் ரேடார் அமைப்புகளை மேம்படுத்தவும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. போர் விமானங்களுடன், ஆரம்பக்கட்ட பயிற்சியளிக்கும் ‘சூப்பர் முஷாக்’ ரக விமானங்களையும் வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் வழங்க உள்ளது.
இதுவரை மேற்கு எல்லையில் பாகிஸ்தான் மட்டும் இருந்த அச்சுறுத்தல், இப்போது கிழக்கு எல்லையான வங்கதேசத்திலும் பாகிஸ்தானின் ராணுவத் தாக்கம் அதிகரிப்பதன் மூலம் வலுவடைகிறது.
இதை ராணுவ வல்லுநர்கள் “மூன்று முனை அச்சுறுத்தல்” (சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம்) என்று குறிப்பிடுகின்றனர். இந்தியாவின் ‘சிக்கன் நெக்’ எனப்படும் சிலிகுரி காரிடார் பகுதிக்கு அருகில் வங்கதேசம் இருப்பதால், அங்கு பாகிஸ்தான் தயாரிப்பு விமானங்கள் மற்றும் தொழில்நுட்பம் வருவது இந்தியாவின் கிழக்கு பிராந்திய பாதுகாப்பிற்கு சவாலாக அமையலாம் என்று கூறப்படுகிறது.
வங்கதேசம் – பாகிஸ்தான் இடையே மலரும் ராணுவக் கூட்டணி! நாட்டின் எல்லையில் புதிய பதற்றம்? விபரம் என்ன?


