
நுவரெலியாவில் உள்ள கிரகரி வாவியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானதுடள், இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் 12:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நீர்த்தேக்கத்தில் இருந்த படகு ஊழியர்களால் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

