தற்போது அனைவரும் தங்கள் எதிர்காலத்தை நிதி ரீதியாக மட்டுமின்றி, சேமிப்பு மற்றும் முதலீடுகளை செய்யவும் நினைக்கின்றனர். குறிப்பாக நடுத்தர மக்கள் அதிக ஆபத்து இல்லாத, உத்தரவாதமான லாபத்தை வழங்கும் முதலீட்டு வழிகளை தேடி வருகின்றனர். அத்தகையவர்களுக்கு, போஸ்ட் ஆபிஸ் சிறு சேமிப்பு திட்டங்கள் பல ஆண்டுகளாக நம்பகமான புகலிடமாக இருந்து வருகின்றன. அந்த வகையில், அரசு ஆதரவுடன் நடத்தப்படும் இந்த திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பையும், நிலையான வட்டி வருமானத்தையும் வழங்குகிறது என்று நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.


