பெர்லிஸ் மந்திரி பெசார் சுக்ரி ராம்லி மீதான நம்பிக்கை இழப்பை அறிவிக்கும் சட்டப்பூர்வ அறிவிப்புகள் (SDs) தொடர்பாகப் பெர்சத்து அதன் ஐந்து பெர்லிஸ் மாநில சட்டமன்ற உறுப்பினர்களையும் வரவழைக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பெர்சத்து அத்தகைய எந்த அறிவுறுத்தலையும் பிறப்பிக்கவில்லை என்றும், இந்த விவகாரம்குறித்து அவர்களிடம் விளக்கம் கோரப்படும் என்றும் கட்சித் தலைவர் முகிடின் யாசின் கூறினார்.
“எந்தவொரு எஸ்டியிலும் கையெழுத்திடுமாறு பெர்சத்துவால் எங்கள் பெர்லிஸ் மாநில சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களுக்கு எந்த அறிவுறுத்தலும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்”.
“பெர்லிஸ் மந்திரி பெசார் பதவிக்கான வேட்பாளரின் பெயரைப் பெர்லிஸ் இஸ்தானாவால் அறிவுறுத்தப்பட்ட பின்னரே பெர்சத்து சமர்ப்பித்தது”.
“எனவே, இந்தப் பிரச்சினையில் என்ன நடந்தது என்பதைத் தீதீர்மானிக்கப் பெர்சத்துமாநில சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து விளக்கங்களைப் பெறும்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பெர்லிஸ் PN-ஐ வழிநடத்தும் கட்சியாக பாஸ்-இன் நிலைப்பாட்டை எதிர்க்கட்சி கூட்டணியும் மதிக்கிறது என்று பெரிகத்தான் நேஷனல் தலைவரான முகிடின் மேலும் கூறினார்.
“பெர்லிஸ் முதலமைச்சர் பதவி தொடர்பான பிரச்சனை பெரிகாத்தான் நேஷனல் (PN) எனும் ஒரு பெரிய குடும்பத்தின் உணர்வோடு சுமுகமாகத் தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
பாஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் பெர்சத்துவைச் சேர்ந்த ஐந்து பேர் என எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் நநடவடிக்கைமூலம்சுக்ரியை நீக்க நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து பெர்லிஸில் அரசியல் கொந்தளிப்பில் உள்ளது.
அவர்கள் பெர்லிஸ் ஆட்சியாளரிடம் SD-களை சமர்ப்பித்ததாகவும், சுக்ரி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் அறிவித்ததாகக் கூறப்படுகிறது.
சங்லாங் சட்டமன்ற உறுப்பினருமான சுக்ரி, பெர்லிஸ் மந்திரி பெசார் (முதலமைச்சர்) பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

