Last Updated:
தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லை மோதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்தம் அறிவித்து, ஆயுத தாக்குதல்கள் நிறுத்தம் உறுதி செய்தன.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக இரு நாடுகளும் அறிவித்தன.
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே பல 100 ஆண்டுகளுக்கு மேலாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 5 நாட்களாக தொடர்ந்த மோதலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து இரு நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மலேசிய அதிபர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதையடுத்து மோதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 8 ஆம் தேதி மீண்டும் மோதல் வெடித்தது.
இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஜெட் விமானங்கள், ராக்கெட் உள்ளிட்டவை மூலம் இரு நாடுகளும் தாக்கிக்கொண்டன. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதுகுறித்து இரு நாடுகளும் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
அதில், அனைத்து விதமான ஆயுத தாக்குதலும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அவர்களின் சொத்துக்கள், பாதுகாப்பு படையினர், கட்டமைப்புகள் உள்ளிட்டவை மீது தாக்குதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


