Last Updated:
திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாஜக மேயராக வி.வி. ராஜேஷ் பதவியேற்றார்.
திருவனந்தபுரம் மாநகராட்சியின் முதல் பாஜக மேயராக வி.வி. ராஜேஷ் பதவியேற்றார்.
கேரளாவில் அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 45 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் வசம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை முதல் முறையாக பாஜக கைப்பற்றியது.
இதையடுத்து திருவனந்தபுரம் மேயராக பாஜக மாநிலத் தலைவர் வி.வி. ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டார். சுயேட்சை உறுப்பினர் ஆதரவு உள்பட மொத்தம் 51 ஆதரவு வாக்குகளுடன் வி.வி. ராஜேஷ் மேயராகப் பதவியேற்றார்.
அவரைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த ஆஷாநாத் துணை மேயராகப் பொறுப்பேற்றார். முன்னதாக திருவனந்தபுரம் மேயராக முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உட்கட்சிப் பூசல் காரணமாக அவருக்குப் பதவி மறுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கைப்பற்றிய கன்னூர், திருச்சூர், கொல்லம், கொச்சி ஆகிய மாநகராட்சிகளில் முறையே நிஜி ஜஸ்டின், வி.கே. மினிமோல், எம்.கே. ஹபீஸ், டி. இந்திரா ஆகியோர் பதவியேற்றனர். கோழிகோடு மாநகராட்சியை மட்டும் ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி கைப்பற்றி இருந்த நிலையில், அக்கட்சியின் ஓ. சதாசிவம் மேயராகப் பதவியேற்றார்.


