Last Updated:
டெல்லியில் இரண்டு நாள் தங்கினால் தனக்கு நோய்த்தொற்று ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.
“டெல்லியில் இரண்டு நாள் தங்கினாலே எனக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. டெல்லி ஏன் காற்று மாசுபாட்டால் இவ்வளவு அவதிப்படுகிறது? நான் தான் போக்குவரத்துத் துறை அமைச்சர். ஆனால், டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் மாசுபாட்டுக்கு போக்குவரத்துதான் 40% காரணமாக உள்ளது” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளரான உதய் மஹுர்கர் எழுதிய ‘My Idea of Nation First: Redefining Unalloyed Nationalism’ எனும் புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, “உண்மையான தேசபக்தி என்றால், இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.
டெல்லியில் இரண்டு நாள் தங்கினாலே எனக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. டெல்லி ஏன் காற்று மாசுபாட்டால் இவ்வளவு அவதிப்படுகிறது? நான் தான் போக்குவரத்துத் துறை அமைச்சர். ஆனால், டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் மாசுபாட்டுக்கு போக்குவரத்துதான் 40% காரணமாக உள்ளது.
புதைபடிவ எரிபொருள்களை இறக்குமதி செய்வதற்கு நாம் ரூ. 22 லட்சம் கோடி செலவிடுகிறோம். இவ்வளவு பணத்தை செலவழித்து நம் சொந்த நாட்டையே மாசுபடுத்தி வருகிறோம். சுற்றுச்சூழல் உகந்த தொழில்நுட்பங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருளைக் கொண்டு நம்மால் தற்சார்பு இந்தியாவை உருவாக்க முடியாதா?” என பேசியுள்ளார்.


