Last Updated:
இந்திய ராணுவம் இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ், குவாரா உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பார்வைக்கு அனுமதி, பகிர்வு மற்றும் கருத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
ராணுவ வீரர்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் வலைதளம் ஆகியவற்றில் செய்திகளைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராணுவ ரகசியங்கள் கசிவதை தடுக்கும் வகையில், சமூக ஊடகங்களை ராணுவ வீரர்கள் பயன்படுத்துவது குறித்து இந்திய ராணுவம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தகவல்களை தெரிந்துகொள்ள இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் பதிவுகளை பார்க்கலாம். ஆனால், அதில் புகைப்படம் வெளியிடுவது, கருத்து பதிவேற்றம் செய்வது, பதிவுகளை பகிர்வது, விருப்பம் தெரிவிப்பது அல்லது செய்தி அனுப்புவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எக்ஸ், யூடியூப் மற்றும் குவாரா ஆகிய சமூக ஊடகங்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிந்த நபர்களுடன் மட்டும் ஸ்கைப், வாட்ஸ் அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய செயலிகள் மூலம் பொதுவான தகவல்களை பரிமாறி கொள்ளலாம் என்றும் லிங்க்ட் இன் இணையதளத்தில் வேலைவாய்ப்பு குறித்து விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
Dec 26, 2025 12:14 PM IST


