சமீபத்தில் ரெக்கவரி ஏஜெண்டுகள் தொடர்ந்து தங்களுக்கு போன் செய்து அழுத்தம் கொடுப்பதாகவும், பயமுறுத்துவதாகவும் கடன் பெற்றவர்கள் புகார் அளித்து வருகின்றனர். நீங்களும் இது மாதிரியான பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்கள் என்றால், இதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகள் மற்றும் NBFC-கள் கடனை மீட்கும் போது கடன் பெற்றவர்களை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக சில கண்டிப்பான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிகள் உங்களுடைய மரியாதையையும், பிரைவசியையும் பாதுகாத்து அதே சமயத்தில் கடனை மீட்பதற்கு உதவியாக இருக்கும்.
கடன் மீட்பு செயல்முறை சட்டத்திற்கு உட்பட்டும், மிகவும் தன்மையாகவும் நடைபெற வேண்டும் என்பதை RBI வழிமுறைகள் குறிப்பிடுகிறது. எனவே பின்வரும் விஷயங்களை ரெக்கவரி ஏஜெண்டுகளால் செய்ய முடியாது:
*பயமுறுத்துவது, தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது, காயப்படுத்துவது அல்லது மன அழுத்தம் கொடுக்கும்படியான வார்த்தைகளை உபயோகிப்பது.
*தொடர்ந்து போன் செய்வது, குறிப்பாக அதிகாலை அல்லது நள்ளிரவு சமயங்களில் போன் செய்வது.
*உங்களுடைய குடும்பம், அக்கம் பக்கத்தினர் அல்லது உடன் பணிபுரிபவர்கள் மத்தியில் உங்களை சங்கடப்படுத்துவது.
*உடல் ரீதியாக தீங்கிழைப்பது அல்லது சொத்தை பறிமுதல் செய்வது.
இவற்றில் ஏதாவது ஒரு செயல்பாட்டில் ரெக்கவரி ஏஜெண்டுகள் ஈடுபட்டால் கூட அது RBI விதிகளை மீறியதற்கு சமமாகும்.
ரெக்கவரி ஏஜெண்டுகள் கடனை மீட்பதற்கு எந்தெந்த விஷயங்களை செய்யலாம்? *ரெக்கவரி ஏஜெண்ட்கள் கடன் பெற்றவர்களை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். இந்த நேரத்திற்கு அப்பாற்பட்டு கடன் பெற்றவர்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பது அவர்களை துன்புறுத்துவதற்கு சமமாகும்.
*ஏஜெண்டுகள் எப்பொழுதும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்கள் எந்த வங்கி அல்லது NBFC சார்பாக பேசுகிறார்கள் என்பதை தெளிவாக கூற வேண்டும்.
*உங்களுடைய கடன் சம்மந்தப்பட்ட தகவல்களை அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் அல்லது உடன் பணிபுரிபவர்களிடம் ரெக்கவரி ஏஜெண்டுகள் பகிர்ந்து கொள்ள கூடாது. இதில் நிலுவையில் உள்ள தொகை போன்றவை அடங்கும்.
*விவரங்களை சோஷியல் மீடியா, வாட்ஸ்அப் குரூப்புகள் அல்லது பப்ளிக் ஃபோரம்களில் பதிவு செய்வது RBI விதிகளை மீறுவதாகும்.
*ஒருவேளை ரெக்கவரி ஏஜெண்டுகள் தேர்ட் பார்ட்டி காண்ட்ராக்டர்களாக இருந்தால், அவர்களுடைய செயல்களுக்கு வங்கி அல்லது NBFC பொறுப்பேற்க வேண்டும். ஏஜெண்டுகள் முறையாக பயிற்சி பெற்று, சரியான வழிமுறைகளை பின்பற்றுவதை வங்கிகள் உறுதி செய்வது அவசியம்.
*புகார்களை முறையாக விசாரித்து சரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
*அவர்களுடைய போன் கால்கள், மெசேஜ்கள், வாட்ஸ்அப் சேட்டுகள் போன்றவற்றை பதிவு செய்து ஆதாரங்களாக சேமித்து வைக்கவும்.
*வாடிக்கையாளர் சேவை மையத்தை போன், இமெயில் அல்லது எழுத்துப்பூர்வமான புகார் மூலமாக தொடர்பு கொள்ளவும்.
*புகாரை பதிவு செய்த பிறகு உங்களுக்கான புகார் எண்ணை நீங்கள் பெற வேண்டும்.
*வங்கி இந்த பிரச்சனையை தீர்க்காத பட்சத்தில், RBI கம்ப்ளைன்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (CMS) மூலமாக ஆன்லைனில் நீங்கள் புகாரை பதிவு செய்யலாம். உடனடியாக நீங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
*EMI தொகைகளை குறைத்து தருமாறு அல்லது லோன் கால அளவை நீட்டித்து தருமாறு கோரிக்கை விடுக்கலாம்.
*கடன் வசூல் தடை கோருவது தற்காலிக நிவாரணத்தை பெற உதவும்.
*ஒரு பெரிய அளவிலான தொகையை கொடுத்து கடனை செட்டில்மெண்ட் செய்ய முயற்சி செய்யலாம்.
*எப்பொழுதும் வங்கியுடனான உங்களுடைய தகவல் தொடர்பு எழுத்துப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.
*எல்லா ஒப்பந்தங்களையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
*ஏஜெண்டுகளிடம் ரொக்கமாக பணம் கொடுக்க வேண்டாம். அதிகாரப்பூர்வ வங்கி சேனல்களை பயன்படுத்தவும்.
*சரியான ID அல்லது அதிகாரப்பூர்வ எழுத்து வடிவிலான நோட்டீஸ் இல்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டாம்.
*அழுத்தம் அல்லது பயத்திலோ நியாயமற்ற விதிமுறைகளுக்கு இணங்காதீர்கள்.
Dec 26, 2025 10:06 AM IST

