நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, சில பிரதேசங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது. (a)

