Last Updated:
அபிசேக் சர்மா டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். வருண் சக்ரவர்த்தி பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் டி20 போட்டிகளுக்கான கேப்டன் சூர்யகுமார் யாதவ், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் டாப் 10 இடங்களுக்கும் இடம்பெறவில்லை.
வரவிருக்கும் உலக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ், தற்போது டாப் 10 வரிசையிலிருந்து கீழே இறங்கி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
2025-ம் ஆண்டில் இவரது பேட்டிங் ஃபார்ம் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. கடந்த 22 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. நடப்பு ஆண்டில் அவரது சராசரி 14-க்கும் குறைவாகவே உள்ளது.
ஃபார்ம் அவுட்டில் இருந்தாலும், அவர் அணியின் கேப்டன் என்பதால் 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவுக்கு எதிராக சமூக வலைளதங்களில் விமர்சனங்கள் குவிந்துள்ளன.
இதேபோன்று டி20 போட்டிகளில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில்லும் தனது மோசமான ஆட்டத்தால் தரவரிசையில் பின் தங்கி தற்போது 31-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தரவரிசையில் சரிந்தது மட்டுமின்றி, 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்தும் கில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று வருண் சக்ரவர்த்தி பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்.


