கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறைக் கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் அவர்களுக்கு உணவுகள் மற்றும் இனிப்புகளைக் கொண்டு வருவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இந்த விழாவைக் கொண்டாடுவதற்கும், கைதிகளின் மனநிலையை மேம்படுத்துவதற்கும் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான ஜகத் வீரசிங்க (Jagath Weerasinghe) தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை விதிகளுக்கு உட்பட்டு, ஒரு கைதிக்குத் தேவையான போதுமான அளவு உணவு அல்லது இனிப்புகளை உறவினர்கள் கொண்டு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சிறைச்சாலை
இந்தச் சிறப்பு ஏற்பாடு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறைச்சாலைக்கு வருகை தரும் உறவினர்கள், அங்குள்ள பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களைச் சரியாகப் பின்பற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

