சிங்கப்பூரில் மதுபோதையில் இருந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த டிசம்பர் 22 அன்று யுஷூன் அவென்யூ 9-ல் நடந்த இந்த சம்பவத்தில், அவர் மதுபோதையில் லாரியை ஓட்டியதாக சொல்லப்படுகிறது.
வெளிநாட்டு ஊழியரின் வேலை அனுமதி (Work permit) ரத்து: சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி நடவடிக்கை
அவருக்கு வயது ஏறக்குறைய 53 இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்று இரவு 12.20 மணியளவில் உதவி வேண்டி தங்களுக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை Stomp செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
பின்னர் அந்த லாரி ஓட்டுநரைக் கைது செய்ததாகவும் காவல்துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயங்களோ பாதிப்புகளோ ஏற்படவில்லை.
அதன் இணையதளத்தில், சம்பவ நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று பகிரப்பட்டுள்ளது.
அதில், காரின் ஓட்டுநரிடமும், லாரி ஓட்டுநரிடமும் காவல்துறையினர் ஏதோ பேசுவது போல தெரிகிறது.
ஆனால் என்ன புகார் எதற்கு காவல்துறை அங்கு வந்தது போன்ற முழுமையான விவரங்கள் வழங்கப்படவில்லை.
விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
9 இந்திய ஊழியர்கள் சென்ற லாரி மீது அதிவேகமாக மோதிய கார்… ஓட்டுநருக்கு சிறை மற்றும் தடை
Photo: Stomp

