வெள்ளி விலை உயர்வுக்கு காரணம் என்ன? பூஜை பொருட்கள், பாத்திரங்கள், அணிகலன் போன்றவற்றுக்கு மட்டுமே வெள்ளி வாங்கி வந்த நிலையில், தற்போது தொழில்துறையில் அதன் பயன்பாடு அதிகரித்திருப்பதால் வெள்ளி விலை எகிறி வருகிறது. அதேபோல், சோலார், மின்சார வாகன தயாரிப்புக்கு வெள்ளி அதிகம் தேவைப்படுவதும், விலை ஏற்றத்திற்கு காரணம் என்று நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.


