Last Updated:
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சூப்பர் ஃபார்மில் இருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது
உள்ளூரில் நடைபெற்று வரும் முக்கிய போட்டியான விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வரும் இஷான் கிஷன் 33 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர் சன்ரைசர்ஸ் ஐதராபத் அணிக்காக விளையாடி வரும் நிலையில் அவர் சூப்பர் ஃபார்மில் இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடக அணிகள் மோதிய போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 412 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷன் 39 பந்துகளில் 125 ரன்கள் எடுத்திருந்தார். வெறும் 33 பந்துகளில் அவர் சதம் அடித்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 125 ரன்களில் 14 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரி அடங்கும்.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சூப்பர் ஃபார்மில் இருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் அவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடுவதால் ஐபிஎல் ரசிகர்களும் அவரது பேட்டிங்கை அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.


