Last Updated:
நோவோ நோர்டிஸ்க், லில்லியின் ஊசி மருந்துகள், அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உடல் பருமனை குறைப்பதற்கான வெகோவி மாத்திரையை அமெரிக்காவில் விற்பனை செய்ய அந்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நோவோ நோர்டிஸ்கின் வெகோவி (WEGOVY), லில்லியின் ஆஃபொர் க்ளிப்ரான் (LILLIAN ORFORGLIPRON) மாத்திரைகள் உடல் பருமனை குறைக்க உலகளவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை, பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை போன்று செயல்படக் கூடியவை.

இதில் வெகோவியை பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி தந்துள்ள நிலையில், ஆஃபொர் க்ளிப்ரான் இன்னும் மதிப்பாய்வில் உள்ளது. நோவோ நோர்டிஸ்க், லில்லியின் ஊசி மருந்துகள், அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வெகோவி வகை மருந்தை, மருத்துவ ஆலோசனையின் பெயரில் உடல் எடையைக் குறைக்கவும் ஃபிட்னெஸ் நன்மைகளைப் பெறவும் தான் எடுத்துக்கொண்டதாக எலான் மஸ்க் தன்னுடைய பழைய பேட்டியில் கூறியிருந்தது தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.


