பருத்தித்துறை – இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் பகுதி
ஆனால் குறித்த சடலம் இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காக சென்று கடந்த 6ஆம் திகதி
நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான கடற்றொழிலாளராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரோக்கிய கிங் என்பவரே இவ்வாறு கடற்றொழிலுக்காக சென்று நடுக்கடலில் தவறி விழுந்து மாயமானதாக தமிழ்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

