முதலில், வங்கிக் கிளைகள் விடுமுறை காரணமாக மூடப்பட்டிருந்தாலும், பணப் பரிவர்த்தனைகள் நிற்காது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்குக் காரணம், டிஜிட்டல் வங்கிச் சேவைகள் 24 மணி நேரமும், வாரம் முழுவதும் (24/7) செயல்படுகின்றன. இதில் முக்கியமாக, மொபைல் பேங்கிங் மற்றும் நெட் பேங்கிங் சேவைகள் (Mobile/Net Banking) பொதுமக்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கணக்கு இருப்பு சரிபார்ப்பு, பணம் பரிமாற்றம், மின் கட்டணம் மற்றும் பிற பில்ல்கள் செலுத்துதல், முதலீடு தொடர்பான சேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் ஸ்மார்ட்போன் அல்லது கணினி மூலம் எந்த நேரத்திலும் மேற்கொள்ள முடியும்.


